Idaividatha nerukangal (Tamil Edition)
₹199.00
Price: ₹199.00
(as of Sep 23, 2024 16:03:15 UTC – Details)
அறை மொத்தமும் போதை வஸ்துவின் பூகைமூட்டம். வியர்வை மழை அவன் கட்டுலை நனைத்திட அவனின் மொத்த போதையையும் அவள்மேனி தன்னில் மட்டுமே.
போதைதன்னில் கோதையை தின்பது அவன் பொழுது போக்கு.
எத்தனை முறையோ அவனே அறியவில்லை அவ்வளவு பித்து அவளில். அவளிலென்றால் அவளில் அல்ல அவளின் உடலில். வான்தொட்ட வெற்றியா வஞ்சி வேண்டும் மனம் வருந்தும் தோல்வியா தேன்சுவை வேண்டும்.
காதலா திருமணமா ச்சே ச்சே கெட்ட வார்த்தை பேசாதீங்க என்று காதைப் பொத்திக் கொண்டு ஓடிடுவான்.
“தேவா…தேவா….”என்று கதவே உடயுமளவிற்குத் தட்ட கதவைத் திறந்ததோ ரினா.
“ச்சீ ச்சீ போய் ட்ரெஸ்ஸை போட்டுடுவா “என்று திரும்பி நின்றான்.
அவளோ குனிந்து தன்னைப் பார்த்தாள். தொப்புள் தெரியும் குட்டி டீஷர்ட் தொடை தெரியும் படி ஒரு குட்டைப் பாவாடை. இதுக்கு மேல என்ன ட்ரெஸ் போடனும் என்றாள் புரியாமல்.
விடிந்தும் விடியாத காலையிலே. ஐந்தடி வெண்சிலெயொன்று அற்புதமாய் வந்து நின்று கதவைத் திறந்து இப்படி தரிசனம் கொடுத்தால் எவனாவது முகத்தைத் திருப்பிக் கொள்வானா…?இவன் செய்வான். அதுதான் துருவன்.
“இதுக்கு மேலதான் ட்ரெஸ்ஸே போடனும்” என்று கடுகடுத்தான்.
உண்மையில் அவள் பார்த்த ஆண்களில் கொஞ்சமல்ல ரொம்பவே வித்யாசமானவன்.
இங்கு வந்த அத்தனைமுறையும் அவள் அவனை எவ்வளவு நெருங்கினாலும் அவன் விலகி ஓடுவான்.
“ஒரே ஒரு வாட்டிடி வீடியோ கால்லதான நேர்லதான் மாட்டேன்னு சொல்லிட்ட வீடியோ கால்ல கூடவா டி”
“நோ அதுலாம் கல்யாணத்துக்கு அப்றம்தான்” என ஸ்ட்ரிக்டாய் மறுத்துவிட்டாள்.
“அடியே நான் என்னவோ நியூட் பிக்சர் கேட்டமாறி பாவலா காட்ற வீடியோ கால்ல ஒரு கிஸ்ஸூதான்டி கேட்டேன்”
இந்த வார்த்தை கேட்டதும் ஸ்விட் ஆஃப்பே செய்துவிட்டாள்.
அவன் எத்தனை கெஞ்சியும் மனமிறங்கவில்லை. இவள்தான் திருமணமே ஆகாமல் ஒரு பிள்ளைக்கு தாயாகப்போகிறாளென இப்போது சொன்னால் உலகமே சிரிக்கும்.
“ஓக்கே மிஸ்.தேவமொழி உங்களுக்கு த்ரீ க்ரோஸ் குடுக்குறன்”
“எனக்கு எதுக்கு பணம் “திக்கி திணறி கேட்டாள்.
“எனக்கு மியூட்சுவலா பேபி பெத்துகுடுக்குறதுக்கு இன்னும் வேணும்னாலும் கேளு ஐ வில் கிவ் பட் ஐ வாண்ட் யெஸ் ஒன்லி” நேரடியாய் பொட்டில் அடித்ததைப் போல கேட்டுவிட்டான்.
பைத்தியமா இவன் என்பதைப்போலத்தான் பார்த்தாள்.
“அதுக்கு வேற ஆள பாருங்க ஸார்”
“நாலு கோடி”
“நோ….”
“ஐஞ்சு…”
“நோ மீன்ஸ் நோ இங்க்லீஷ் புரியாதா”
“ஆறு”
“நூறு கோடி குடுத்தாலும் முடியாது”
“ஒய்”
“நான் வேற ஒருத்தரை லவ் பண்ற அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசபடுறன் அவரோடதான் குழந்தையும் பெத்துப்பேன்” உறுதியாய் சொன்னாள்.
“சோ வாட் பண்ணிக்க பெத்துக்க முதல்ல எனக்கு அதுக்கப்றம் யுவர் விஷ் “
தந்தையும் மகளையும் பார்க்க ஊர்கண்ணே பட்டுவிடும் போல. பிஞ்சுக் குழந்தைக்கு தாடி மீசை இருந்தால் அவனின் அப்பனேதான். மீசைதாடியெல்லாம் வழித்தால் அவனும் அப்பிஞ்சினைப்போல்தான் இருப்பான்போலேம்.
இருவரின் முகத்திலும் அப்படி ஒரு அமைதியும் சாந்தியும் இருந்தது.
அதற்கு நேர்மாராய் அவர்கள் எதிரில் இருவரையும் பார்வையால் பொசுக்கியபடி இருந்தாள் அவள்.
தலை கலைந்து ஆடை கிழிந்து ஒப்பனையெல்லாம் அழிந்து அறையின் ஒரு முலையில் அமர்ந்திருந்தவளிடம் சொன்னான்.
“என் குழந்தைக்கு நீ அம்மாவ இருக்கனும்” கோரிக்கையல்ல இருந்தே ஆக வேண்டுமென்ற கட்டளைதான் இருந்தது.
“என்னால முடியாது” அவளின் அழுத்தமான குரலைவிட அழுத்தமாய் ஒலித்தது அவனின் குரல்.
“இது ரெக்வஸ்ட் இல்ல இந்த ரிஷிக்கண்ணாவோட ஆர்டர்” என்று மிரட்ட மிராவோ மிரண்டு பார்க்க குழந்தையோ அவளிடம் தாவிக்கொண்டு ஓடியது.
ASIN : B0D8QNQ6TJ
Language : Tamil
File size : 1153 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 497 pages
There are no reviews yet.