வான் மேவிய முகில் 8 (Tamil Edition)
₹400.00
Price: ₹400.00
(as of Aug 31, 2024 05:33:10 UTC – Details)
சில பல கணங்களுக்கு பின், “மஞ்சு-ன்னா மேகம்-ன்னு ஒரு பொருள் இருக்கு. மஞ்சு, வந்து போகும் மேகம் போல என் வாழ்க்கையிலே நீ வந்து போயிட்ட… பொய்த்துப் போயிட்டன்னு கற்பிதம் செஞ்சி… நொந்து போயிருந்தேன்!… என் நினைப்பு தப்பா போனதை நினைச்சா எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!” என்றான்.
அவள் ஆச்சரியமாகப் பார்த்துச் சொன்னாள், “நானும் கூட சில சமயம் இப்படி நினைச்சிருக்கேன் …த்தான். வந்து போன மேகம் போல உங்க வாழ்க்கையிலே நான் வந்து போனதாகவே இருக்கட்டும்னு. உங்க அன்பு கிடைக்காதப்போ எல்லாம்
முகில் வானத்துக்கு ஆசைப்பட முடியுமா?… எப்போவும் வானத்தோடயே இருந்திட முடியுமா?!… முகில் மழையா மாறி மண்ணுக்கு போயி தானே ஆகணும்ன்னு மனசை தேத்திப்பேன்.”
“நீ வந்து போகும் மேகம் இல்லை; நீ நிரந்தரம். என்னோட வாழ்வாதாரம்.”
“மேகம் வானத்திலேயே இருக்கறதில்லேயே, அத்தான்!”
“முகில் மண்ணுக்கு போனாலும் போன வேலை முடிஞ்சதும் வானத்துக்கே வந்துடும் மஞ்சு.”
“ம்… எனக்கு பிரியாத வரம் தான் வேணும்.”
“மேகம் பல உருவெடுக்கலாம் மஞ்சு… மேகம் மழை ஆகலாம்; மழை நீராவி ஆகலாம்; ஆனா முடிவிலே அது மீண்டும் மேகமா தானே ஆகணும்?! வானோடு தான் மேகம்… அதே போல தான் நீயும், மஞ்சு. என்னோடு தான் நீ! நமக்கு இனி பிரிவே இல்லை.
உன்னை தாய் மகள் மருமகள்ன்னு யார் வேணாலும் என்ன உறவு வேணாலும் கொண்டாடிக்கட்டுமே, ஆனா முதலும் முடிவுமா நீ என் மனைவி. எனக்கு மட்டுமே உரியவள். எனக்கு மட்டுமே சொந்தம். யூ ஆர் ஃபாரெவேர் மைன். (You are forever mine!).
நீ இந்த மதுவந்த வானவன் மேவிய முகில். வானவனை மேவிய முகிலும் நீ தான்!
வான்… மேவிய… முகில்! நான்… மேவிய… முகில்!”
என்று வார்த்தைக்கு வார்த்தை ஒரு வன்முத்தம் பதித்தான். பின் இதழ் வைத்த தீயை நாவால் நனைத்து.. அணைத்து.. தன்னுடையவளை மீண்டும் தனதாக்கிக் கொண்டான்.
“வான் மேவிய முகில் மட்டும் இல்லை மதனத்தான், வான் மேவிடும் முகிலும் நான் தான். இந்த மையலுக்கு முடிவே இல்லையாம்!” அவள் மெல்ல கிசுகிசுத்தாள்.
வானேறி… வில்லேந்தி… நாணேற்றி…
மாறன் அம்பு விடுத்தான்;
மலர் கணை தனை
மதன் தொடுத்தான்;
வானும் முகிலும் காதலாட…
கண்டிருந்த கான மயில்
தோகை விரித்தாட…
மயிலிறகால் மதுவந்தன் வருட…
மையலுருவாய் மஞ்சிரா மாற,
நிழலை இருள்
கவ்விக் கொண்டது போல
அவளை அவன்
பின்னிக் கொண்டான்!
மஞ்சிரா
மோகத்தில் மெட்டிசைத்தாள்;
வானவ மதுவந்தன்
வானுலகை மண்ணுக்கழைத்தான்!
பூவிதழில் பாட்டெழுதி,
சொக்கும் விழிகளில்
சொர்க்கத்தை சிருஷ்டித்தான்!
வானெங்கும் முகில் மேவியது!
தேனுலகின்
வான் மேவிய முகில்
இனிதே நிறைவுற்றது!
வான் மேவிய முகில், பூ தொட்ட புயல், நதி தேடிய கடல் மற்றும் இருள் மறைத்த நிழல் முதலான தேனுவின் நாவல்களை தேனின் குரலிலேயே ஆடியோ நாவலாக கேட்க வேண்டுமா?
“தேனுலகம்” சேனல் உங்களை அன்போடு வரவேற்கிறது.
Subscribe http://youtube.com/@thenulagam
ASIN : B0DCT8QHK4
Language : Tamil
File size : 4036 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 68 pages
Ramya –
Needlessly lengthy
Not much twists and turns in plot yet the story is so lengthy…. U couldnt read the entire thing as it was so boring. One line story written in 8 parts and each book costs 450 rupees…. Not worth the time. Not worth the money