நயனமே..! என் நறுமுகையே..! (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

42,000.00

Category: Tag:

நயனமே..! என் நறுமுகையே..! (Tamil Edition)
Price: ₹42000
(as of Nov 27, 2024 03:13:47 UTC – Details)



ஒரு விபத்தில் தன் கணவனை இழந்து அவன் நினைவுகளை மட்டுமே சுமந்து தனது மூன்று வயது மகனுடன் வேலை நிமித்தமாக அந்தமானுக்குச் செல்கிறாள் நாயகி…

அங்கு தன் கணவனைப் போன்றே தோற்றம் கொண்ட ஆனால் குணத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒருவனை தனது முதலாளியாக கண்டு அதிர்ச்சி அடைகிறாள் நாயகி…

அதன்பின் அவர்களது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களுமாக அந்தமானைச் சுற்றி ஓர் அழகிய காதல் பயணம்…

கதையிலிருந்து சில துளிகள் :

கோப்பினில் கவனம் பதித்திருந்தவனின் பார்வை அவளது இடது கை பெருவிரலின் கீழ் பதிந்தது. RISHI என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தி இருந்தாள். அதனை இப்போதுதான் அவன் கவனிக்கிறான்.

புருவம் சுருக்கி அந்த பெயரை ஆழ்ந்து பார்த்தவன் “உன் ஹஸ்பண்ட் பேரா…?” பார்வையை அங்கேயே பதித்தபடியே கேட்க “ஹான்…” அவளோ என்ன கேட்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.

தன் கையில் வைத்திருந்த பேனாவால் அவள் டாட்டூவின் மீது தட்டி “இதை கேட்டேன்…” என்றான்.

“ம்… ஆமா… மை ஹஸ்பண்ட் ரிஷிகேஷ் யாதவ்…” அழுத்தமாக உச்சரித்தவளை தானும் விழி உயர்த்தி அழுத்தமாகப் பார்த்தான்.

“ரொம்ப பிடிக்குமோ…?” அந்த கண்களில் ஒருவித பொறாமை.

“என் உயிர்…” சட்டென பதில்.

“அந்த உயிர்தான் இப்போ உலகத்துல இல்லையே…”

“ஆனா எனக்குள்ள கலந்திருக்கார்…”

“எப்படி…? செத்துப் போனவனோட சாம்பலை தண்ணியில கரைச்சு மடக் மடக்குன்னு குடிச்சிட்டியோ…” அவனது நக்கலான தொணியில் கோபம் எழ அவனை தீயாய் முறைத்தாள் கவி.

“நேசத்தோட ஆழம் எல்லாம் உங்களை மாதிரியான ஆளுங்களோட பார்வைக்கு நக்கலாதான் தெரியும்…” விரக்தியாய் இதழ் வளைத்தாள்.

“அப்படியா… அப்ப நீதான் சொல்லிக் கொடேன்… நானும் தெரிஞ்சிக்கிறேன்…”

“அது எனக்கு அவசியம் இல்லாத வேலை…”

“எனக்கு அவசியமா இருக்கே…”

“சார்… வேலையை பத்தி பேசுறீங்களா… வேற ஏதாவது டீடைல்ஸ் கேட்கணுமா…?” என்றபடியே கோப்பினை புரட்ட “ஆமா… இன்னும் டீடெயில்ஸ் வேணும்…” என்றான் பேனாவால் தன் முன் நெற்றியில் தட்டியபடியே.

“கேளுங்க…”

“உன் புருஷன் எப்போ இறந்தான்…?”

மீண்டும் விழி உயர்த்தி அவனை முறைத்தவள் “நான் வேலையைப் பத்தி கேட்க சொன்னேன்…” என்றாள் கோபமாய்.

“நான் உன்னை பத்திதான் கேட்டுட்டு இருக்கேன்… பதில் சொல்லு…” பேனாவை மேஜையில் தூக்கிப் போட்டு தானும் குரல் உயர்த்தினான் சமரன்.

தன் கண்களை மூடித் திறந்தவள் “நாலு வருஷம் ஆச்சு…” என்றாள்.

“எப்படி…?”

“ஃபயர் ஆக்சிடென்ட்…” சொல்லும்போதே அவள் குரல் மெல்ல தழுதழுத்தது.

“So sad…” ஒரு சில நொடிகள் அவன் முகத்திலும் கவலையின் ரேகை வந்து போனது.

ASIN ‏ : ‎ B0CW1QWDP4
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1064 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 500 pages

2 reviews for நயனமே..! என் நறுமுகையே..! (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Placeholder

    Best emotional of family
    Such a best book to read.it bring us inside to deep in the story. I am traveled in andhaman place.i suggest 100 percent to read this……

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Kindle Reader

    nice story, but lengthy
    Nice story, but it was too lengthy. If it had been edited, it would have been more gripping. I skipped many pages toward the end

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart