கண்மணி அன்போடு காதலன் ; Kanmani Anbodu Kathalan : பழி வாங்கும் காதல் (Tamil Edition)
₹230.00
Price: ₹230.00
(as of Jan 24, 2025 14:37:47 UTC – Details)
“என்னை பார்க்கும் போது மட்டும்தான் அழுது வடிவாயா? மற்ற ஆண் பிள்ளைகள்
எல்லோரிடமும் இளித்து இளித்து பேசுவாயா?”இரக்கமின்றி கேட்டவனை வெறித்துப்
பார்த்தாள் தீபிகா.
“ இந்த ஸ்கூல் சேர்மன் நான்தான். அப்பாவிற்கு பிறகு என் கைக்குத்தான் இந்த பள்ளிக்கூடம்
வரப்போகிறது என்று தம்பட்டம் அடித்தானா அவன்? சொத்துக்காரன் அவன்தான் என்று
அவன் பின்னால் போய்விட்டாயோ?”
கடப்பாரை வைத்து உச்சந்தலையில் நங் நங்கென்று இடிக்கும் வகையில் இருந்தன அவனின்
ஒவ்வொரு கேள்விகளும். “அவர் உங்கள் தங்கை கணவர் சார். அவரை இப்படி தரக்குறைவாக
நினைக்கலாமா?”
“ தரக் குறைவானவர்களுடன் ஜோடி சேர்ந்து சிரித்து விளையாடும்போது அவனையும்
அப்படித்தானே நினைக்கத் தோன்றுகிறது. நன்றாக கேட்டுக் கொள், இந்தப் பள்ளியின்
உரிமை இப்போது என்னிடம்தான் இருக்கிறது.என் அனுமதியின்றி இங்கே ஒரு புல் கூட
முளைக்காது.இங்கே அதிகாரமானவன் நான் மட்டும்தான்.கூடிய விரைவிலேயே இந்த
சொத்தை என் வசப்படுத்திக் கொண்டு விடுவேன். தவறாக ஏதாவது நினைத்துக் கொண்டு
கண்டவனிடமும் பல்லைக் காட்டும் வேலை இனி வைத்துக் கொள்ளாதே. அப்படி குழைந்து
குழைந்து பேச வேண்டும் என்றால் என்னிடம் வா,நான் எப்போதும் எல்லாவற்றிற்கும்
தயாராகத்தான் இருக்கிறேன்”
பேச்சின் முடிவில் அவள் தோளை பற்றினான்.
தீ சுட்டது போல் அவனை உதறிவிட்டு வெளியே ஓடி வந்தாள் தீபிகா. எப்படியெல்லாம்
பேசுகிறான்!எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறான்! அவளுடைய அமர்தானா இது? ஏன்
இப்படி மாறிவிட்டான்? வேதனையோடு ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து
கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள்.
ASIN : B0DPG952RK
Language : Tamil
File size : 368 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 147 pages
There are no reviews yet.