உன்னை கண்டேனே முதல்முறை (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

310.00

Category: Tag:

உன்னை கண்டேனே முதல்முறை (Tamil Edition)
Price: ₹310.00
(as of Nov 07, 2024 11:36:05 UTC – Details)



“பிரேக்ல லைப்ரரி வா!!”

அழுது கொண்டே சூர்யா என்று எழுதிக் கொண்டிருந்த அவளின் பேனாவை வாங்கி அவள் எழுதிக் கொண்டிருந்த பக்கத்திலேயே கீழே இதை எழுதி வைத்துவிட்டு மெதுவாக அவள் தலையை தட்டி விட்டு திரும்பி நடந்தவன்.

ஒரு நிமிடம் திரும்பி அவளிடத்திலேயே வந்து “சூர்யா” என்று அவள் எழுதியிருந்த பக்கத்தில் “சூரியாவின் தேவகி” என்று இணைத்து எழுதி வைத்துவிட்டு, அவள் அதிர்ந்து சூர்யாவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது யாரும் அறியா வண்ணம் தலையை கோதுவது போல அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அவள் மகிழ்ச்சியில் மூச்சு விட கூட மறந்துப்போனாள். ‘என்ன எழுதிவிட்டு போகிறார்’ என்று அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனின் அழகான முத்து முத்தானா எழுத்துக்களில் “சூர்யாவின் தேவகி” என்ற வாசகம் மிகவும் அழகாக மின்னிக் கொண்டிருந்தது.

எதுவுமே நடக்காதது போல் மீண்டும் தன்னுடைய புத்தகத்தை கொண்டு முகத்தை மூடி அமர்ந்திருந்தவனின் முகத்தை பார்க்க முடியாமல் ஏக்கம் நெட்டி தள்ளவே, அழுத விழிகளை துடைத்துக்கொண்டு எழுந்து சூர்யாவின் மேஜை பக்கம் அதே நோட்டை எடுத்துச் சென்று மீண்டும் கணக்கில் சந்தேகம் கேட்பது போல் “முகத்தை மூடாதீங்க நான் உங்கள பாக்கணும்” என்று மட்டும் எழுதிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து எதுவுமே நடக்காது போல் அமர்ந்து கொண்டாள்.

சூர்யாவுக்கு வெட்கம், கூச்சம் என்று அவனின் சிவந்த முகத்திற்கு மேலும் சிகப்பு கூட்டியது. அவளின் அழுத விழியை பார்க்க தாங்காமல் காதலை வெளிப்படுத்திவிட்டான். ஆனால் சும்மாவே அவள் தன்னை அடித்து சாப்பிடும் அளவு தான் பார்த்துவைப்பாள். இப்பொழுது ‘இன்னும் வெளிப்படையாக சைட் அடிச்சே காலி பண்ணிடுவா சில்லு வண்டு. தன்னுடைய மரியாதைக்கு பங்கம் வராமல் இருந்தால் சரி’ என்று ஒருபுறம் யோசித்தாலும் மனம் என்னவோ ‘என் தங்கத்திற்கு’ முன்னாடி மரியாதையாவது மண்ணாங்கட்டியாவது அவளை அழுகாமல் பார்த்துக் கொள்வதே என்னுடைய பிறவி கடன் என்று எண்ணியவன் புத்தகத்தை கீழே வைத்து புரட்டிக்கொண்டே ஓரவிழியால் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

தேவகி இமைக்க கூட மறந்து சூர்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகத்தை தாண்டி அவளுக்கு வேறெங்கும் நினைவு இல்லை. ‘ஏன் இப்படி பார்க்கிறாள்’ என்று ஒரு நிமிடம் ஆணாகவே இருந்தாலும் கூச்சம் அள்ளி தின்ன தனக்கான ஒருத்தி தன்னை இப்படி ரசித்துப் பார்ப்பதை அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை. காதலிப்பதை விட காதலிக்க படுவதே பேரின்பம்!!

ASIN ‏ : ‎ B0DLSWRYM6
Publisher ‏ : ‎ கிர்த்திகா விக்னேஷ்வரன் (1 November 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 717 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 161 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “உன்னை கண்டேனே முதல்முறை (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

shopindia
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart