வகுப்புரிமைப் போராட்டம் (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

75.00

Category: Tag:

வகுப்புரிமைப் போராட்டம் (Tamil Edition)
Price: ₹75.00
(as of Jan 16, 2025 01:19:22 UTC – Details)



‘கம்யூனல் ஜி.ஓ’- வகுப்பு வாதச்சட்டம், வகுப்புத் துவேஷிகளின் திட்டம், வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சித்திட்டம், மதத் துவேஷிகளின் சட்டம், தேசத்துரோகிகளின் சூதுத்திட்டம், திறமையையும் தகுதியையும் பாழாக்கும் தவறான ஆணை, தனி மனிதர்களின் அடிப்படை உரிமையையே பறிக்கும் உத்தரவு- என்று ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு வகையாகத் திரித்துக்கூறி தூற்றிப்பேசி, கண்டித்துத் தீட்டித் தமது தேசிய செல்வாக்கையும் பயன் படுத்திப்பார்த்து, இவ்வளவிலும் சமூக நீதித்திட்டத்தைச் சாய்க்க முடியாதது கண்டு, சமயத்தினை எதிர் பார்த்து இருந்து, விடுதலைக் கொண்டாட்டத் தின சந்தடி சாக்கில், அரசியல் சட்ட நகல் தீட்டும் வேளையில், ஆதிக்கவாதிகள் தமது சுயநலம் ஓங்கும் வழி, சட்டத்தைத் திருத்தி, சட்டசபையில் நிறைவேற்றி விட்டு, வீடு திரும்பி, தமது வேதபுத்தகமாகிய சட்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி, வழக்குமன்றம் ஏறித் தமது வாய்த் திறமை காட்டிச் சமூக நீதித் திட்டத்தினைச் சாய்த் துள்ளனர்.

ஆனால், இவைகளை அறியாதார், ஆதிக்கவாதிகளின் கூற்றையே நம்பி, ‘‘கம்யூனல் ஜி. ஓ.’’ என்றாலே அந்த ஆங்கிலச் சொல்லின் பொருளின்படியே, “வகுப்புவாத (பேத) அரசாங்க உத்தரவு’’ என்றே மனத்தில் கொண்டு தடுமாறுகின்றனர். உண்மையில் சொல்லளவில், அவ்வாறு நின்றாலும், அதன் அடிப்படையையும், நோக்கத்தையும், பயனையும் அறிபவர்கள், அதனை ‘‘வகுப்பு உரிமையை நிலை நாட்டும் அரசாங்க உத்தரவு” என்பதை உணர்ந்து போற்ற முன் வருவர்.
இதன் உண்மையை உணர, இத்திட்டம், எந் நிலையில் யாரால் கொண்டு வரப்பட்டது என்பதையும், இதனை யார் அன்றும் இன்றும் எதிர்க்கிறார்கள், ஏன் எதிர்க்கிறார்கள் என்பதையும் அறிவது அவசியமாகும்.

இழி நிலை போக்க ஓர் இயக்கம்
இந் நிலைக்காளான மக்களை ஈடேற்றுவதற்கு ஒரு இயக்கம் அதற்கென்றே அவசியமாகின்ற தன்றோ ? விடுதலைக்குப் போராடி வந்த காங்கிரசில்’ அதற்கு இடமின்மையினாலேயே, சமூக நீதியை நிலை நாட்ட, தென் இந்தியர் நலவுரிமைச் சங்கம், என்ற நீதிக்கட்சி, (Justice Party) தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு, பிற்பட்ட வகுப்பார்களாகிய பெருவாரியான பொது மக்களின் பேராதரவையும் பெற்றது.
இக்காலத்தில், பார்ப்பனரல்லாதாரில் சிலர் படித்து, அரசாங்க உத்தியோகம் பெற முயற்சிக்கலாயினர். பார்ப்பனர்களே, எங்கும் பெருந்தடையாக இருந்ததால்–இத்தடையை நீக்கிப் பார்ப்பனரல்லாதாரும் எளிதில் பதவி பெறும்படி ஏதேனும் ஒரு நிலைத்த ஏற்பாடு செய்யவேண்டுமெனத் திராவிடத் தலைவர்கள் அரசாங்கத்தை வற் புறுத்தி வந்தனர்.
அதன் காரணமாக அரசாங்கம், வரிவசூல் இலாக்காவில் (Revenue Dept.) இனி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கையில், எல்லா வகுப்பார்கட்கும், பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையிலேயே தெரிந்தெடுக்க வேண்டும், என்ற ஒரு நிலையான உத்தரவைப் (No. 128-(2) Boards Standing Order) பிறப்பித்தது. ஆனால் இவ்வுத்தரவு ஏட்டளவில் தான் உருவாயிற்தே தவிர, செயலளவில் எதிர்பார்த்த பயன் ஏற்படவில்லை.
கொள்கை உத்தரவாயிற்று
இந் நிலையில், 1920-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் – நீதிக்கட்சியினர்-சட்ட சபையில் பெரும்பான்மையினராக வந்தனர். அதன் பயனாக பனகல் அரசரின் மந்திரி சபையும் அமைந்தது. நீதிக்கட்சியின் சார்பில், டாக்டர் நாயர் தமது இறுதி மூச்சு இருந்தவரை வற்புறுத்திவந்த வகுப்பு விகிதாசார உரிமைக் கொள்கை, வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் தளராத முயற்சியாலும், பனகல் மன்னரின் அறிவு நுட்பத்திறனாலும், 1921-ம் ஆண்டில் சென்னை மேல் சபையில் (Legislative council) தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டது.
“அரசாங்க அலுவலகங்களில் உள்ள மொத்த பதவிகளில் பார்ப்பனரல்லாதார் பெற்றுள்ள பங்கு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத் தோடு, ரெவினியூ இலாகாவிற்கென வெளியிடப் பட்டிருந்த, அதே இலாக்காவின் எண் 128-ல் 2-ஆன, நிலையான உத்தரவை (Board’s Standing Order) அரசாங்கத்தின் இலாக்காக்கள் அனைத்திற்கும் உரியதாக்க வேண்டுமெனவும், முக்கியப் பதவிகளை மட்டுமன்றி எல்லாத் தரப் பதவிகளையும், அவ்வுத்தரவு கட்டுப்படுத்த வேண்டுமெனவும், அரசாங்கம் அதற்கேற்ப ஆணை பிறப்பிக்க வேண்டுவதோடு, ஆறுமாதங்கட்கு ஒரு முறை அவ்வுத்தரவின்படி ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையை இலாக்கா தலைவர்கள் அனுப்பிவைத்து, மேல்சபை உறுப்பி னர்கட்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கிறது’’ என்பதே அத்தீர் மானம்.

ASIN ‏ : ‎ B0DQYMQRF2
Publisher ‏ : ‎ THIRUVALLUVAR POTHGA ILLAM; 1st edition (18 December 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1337 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 188 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “வகுப்புரிமைப் போராட்டம் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

shopindia
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart