வானம் இடிந்து வீழ்வதில்லை- Vaanam Idinthu Veezhvathillai (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

500.00

Category: Tag:

வானம் இடிந்து வீழ்வதில்லை- Vaanam Idinthu Veezhvathillai (Tamil Edition)
Price: ₹500.00
(as of Oct 09, 2024 08:07:19 UTC – Details)


கசங்கிய புடவையும் கண்ணில் மரண பயத்துடனும் மூச்சிரைக்க அந்த வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தவளுக்கு கண்ணில் புலப்பட்டது எல்லாம் காரிருளில் வெறிச்சோடிக் கிடந்த சாலை மட்டுமே.

தப்பித்து சென்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் ஓட்டமெடுத்தவள் ஒரு கட்டத்தில் முச்சந்தியில் வந்து நின்றாள்.

அவசரமாக இடமும் வலமுமாக தலையை திருப்பி பார்வையை சுழலவிட்டாள்.

எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று நொடியில் முடிவு செய்தாக வேண்டிய நிலை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நெருங்கி கொண்டிருந்தது.

இடது புறம் திரும்பினால் காவல் நிலையம் சென்றுவிடலாம்.

அவளுக்கு தெரியும். அவள் நன்கு அறிந்த இடம் தான் அது. காவல் நிலையம் சென்றால் தப்பித்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன.

சட்டென முடிவு செய்தவள் இடப்புறமாக திரும்பி இரண்டு எட்டுக்கள் வைத்திருப்பாள். அவளது மூளையில் பதிந்த காட்சிகள் வலது புறத்தில் நின்றிருந்த ஜீப்பும் அதன் பின் பகுதியில் ஒட்டியிருந்த “கீப் காம், தெ ஸ்கை இஸ் நோட் ஃபால்லிங்” (அமைதிகொள் மனமே! வானம் இடிந்து வீழ்வதில்லை) என்ற வாசகமும் கண்ணில் பட்டதாக நினைவூட்ட சட்டென்று திரும்பி பார்த்தாள்.

ஆம் அதே வாசகம் தான்.

அவளுக்கு பரிட்சயமான வாசகம்.

அவளுக்கு தேவையான வாசகமும் கூட.

வாசகம் மட்டும் அல்ல வண்டிக்காரனும் கூட பரிச்சயமானவன் தானே.

இடது புற சாலையை தேர்ந்தெடுத்த அவளது பாதங்கள் அடுத்த நொடி திசை திரும்பியிருந்தது.

காவல் நிலையம் சென்றால் தப்பிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால், அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவனிடம் சென்றால் நிச்சயம் தப்பித்துவிடுவாள்.

அவளுக்கு காவலனாக நிச்சயம் அவன் இருப்பான்.

அந்த ஜீப்பை நோக்கி அடி எடுத்து வைத்த அவள் கால்கள் இரண்டும் மெல்ல வேகத்தை கூட்ட ஓடி சென்று அந்த ஜீப்பின் பின் புறத்தில் இருக்கரங்களையும் அடித்து ஊன்றினாள்.

வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அதன் பானெட்டின் மீது ஏறி, சாய்ந்து அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, ஒரு கரத்தை தலைக்கு கொடுத்து, மறு கரத்தில் பீர் பாட்டிலை வைத்து குடித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஜீப்பினுள்ளிருக்கும் வானொலியில் மெல்லிய பாடல் கசிந்துகொண்டிருந்தது.

அவள் ஓடி வந்து மோதி நின்றதில் வண்டியில் ஏற்பட்ட அதிர்வில் பாடலில் இலயித்திருந்தவனின் ரசனை கலைய கடுப்பானவன் “அடிங், எவன்டா அது என் வண்டிமேல வந்து மோதுறது” என்று கேட்டுக்கொண்டே பானெட்டின் மீதிருந்து பாய்ந்திறங்கினான் ஆதீஷ்.

வேகமாக அவளை நோக்கி வந்தவனுக்கு களைப்பின் மிகுதியில் வண்டியின் மீது சாய்ந்து நின்றிருந்த பெண்ணின் முதுகுப்பகுதியே தெரிந்தது.

பெண் என்றதும் அவளை பார்த்து ராகம் போல விசிலடித்தவன் “ஹேய் பாப்பா… என்ன நீயும் சரக்கடிச்சிருக்கியா… நடந்து வரும் போதே வண்டி மேல வந்து மோதுற” என்றான்.

அவன் குரல் செவிகளில் விழுந்ததும் சட்டென்று திரும்பி பார்த்தாள் அதிஷா.

“ஹேய்…டாக்டர் பேபி?” என்று சொன்னவனின் விழிகள் அவளை ஆராய்ச்சியாக பார்த்தன.

முகமெல்லாம் வியர்த்து வடிய கலைந்த கூந்தலும், கசங்கிய புடவையும் கழுத்தில் தொங்கிய புது தாலியும் கை, முகம், கழுத்து என்று தாலியிலும் தெறித்திருந்த இரத்தக் கறையுமாக நின்றிருந்தாள் பெண்ணவள்.

அவனை பார்த்ததும் மனதிற்குள் ஒருவகை நிம்மதி பரவியதை உணர்ந்தவளுக்கு கண்ணில் தேக்கி வைத்திருந்த விழிநீர் உருண்டோட “ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என்று நலிந்த குரலில் சொல்லிக்கொண்டே அவனை தாவி அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.

“ஏய் ஏய் ஏய் ….தள்ளு…தள்ளு” என்று சொல்லிக்கொண்டே அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன் “உனக்கெதுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்? நீ என்ன என் பொண்டாட்டியா? அதெல்லாம் முடியாது. அது தான் அவனை கட்டிக்கிட்டு போயிட்டல்ல… மரியாதையா கிளம்பு” என்று அதட்டி விட்டு திரும்பி நடக்க ஆயுத்தமானவனின் கரத்தை பிடித்து நிறுத்தியிருந்தாள் பேதையவள்.

இப்பொழுது அவன் மட்டுமே அவளுக்கு அடைக்கலமளிக்க முடியும்.

“எனக்கு சம்மதம்” என்றாள்.

அவன் கையை பற்றியிருந்த அவள் கரத்தை திரும்பி பார்த்தவன் “கையை எடு. என்ன சம்மதம்…சும்மா உளறாம கிளம்பு” என்று சொல்லிவிட்டு ஜீப்பின் ஓட்டுனர் பகுதியின் கதவை திறந்து உள்ளே ஏற சென்ற சமயம் “உங்க கூட ஒரு நைட் இருக்க சம்மதம்…” என்றாள் வேகமாக.

அவள் சொல்லில் அதிர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க “அன்னிக்கு கேட்டிங்களே ஒரு நைட்டுக்கு வரியான்னு… வரேன் கூட்டிட்டு போங்க” என்றாள்.

Romance,crime, thriller,suspense, doctor, police, rowdy, tamil novel, love story, vilacini Mohan

ASIN ‏ : ‎ B0DHW98SK4
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 266 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 186 pages

1 review for வானம் இடிந்து வீழ்வதில்லை- Vaanam Idinthu Veezhvathillai (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. riya

    Good to read.
    Unpredictable moves.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart