என் காதலாழி நீய(டி)டா… (Tamil Edition)
₹699.00
Price: ₹699.00
(as of Sep 30, 2024 03:52:25 UTC – Details)
அவள் அதி அதி என கூற அவனுக்கு கண் மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்தது. கதவு அருகே போனவளை ஒரே எட்டில் எட்டி பிடித்தவன், நீ என்னை விட்டு எங்கேயும் போக முடியாது. நீ என்னோட மினி என் கூடத்தான் இருக்கணும்… என்றான் கத்தலாக.அவன் கத்தவும் பயந்து போனவள், மாட்டேன் மாட்டேன் நான் உன்கூட இருக்க மாட்டேன். நான் அதிகிட்ட போறேன்… என அவளும் வீம்பாக அழுது வைத்தாள்.இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன், திரும்ப திரும்ப அவன் பேரையே சொல்லிட்டு இருக்க. அவன் செத்து போய்ட்டான். நீ வேண்டாம்னு சொல்லி உன்னை தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டான். இனிமே திரும்ப வரவே மாட்டான். நான் உனக்காக இருக்கேன்டி, உன்னை நல்லா பார்த்துக்கறேன்டி. என்னை உனக்கு பிடிக்கலையா, அப்ப தள்ளி விட்டதுக்கு சாரிடி மினி. என்னை ஏத்துக்கோடி என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடி. என்னை ஏண்டி புரிஞ்சுக்க மாட்டேன்கிற. நீ ஒவ்வொரு முறை அதி அதின்னு சொல்லும்போதெல்லாம் குற்றவுணர்ச்சில செத்து செத்து பொழைக்கறேன்டி. எனக்கு நானே எதிரியா நிக்கறேன். அந்த அதியை விட நான் உன்னை அதிகமா லவ் பண்றேன்டி. அது ஏன் உனக்கு புரியலை. உன்னோட அருமை தெரியாம வேண்டாம்னு சொன்னவனை இன்னும் நினைச்சுட்டு இருக்க. ஆனா உன் காலடியில சுத்தி சுத்தி வர என்னை ஏத்துக்க மாட்டேன்கிற. வலிக்குதுடி மினி, அவனை மறந்துடு. எப்படி எல்லாத்தையும் மறந்து போனியோ அதே மாதிரி அந்த கேடு கெட்டவனையும் மறந்துடு. உன் அன்புக்கு காதலுக்கு எதுக்குமே அவன் தகுதியானவன் இல்லை. ஆனா நான் உன்னை உன் காதலை புரிஞ்சிக்கிட்டவன், உனக்காக மட்டுமே வாழணும்னு நினைக்கறேன். உன்னோட நினைப்புல நான் மட்டும் தான் இருக்கணும், இந்த தேவ் மட்டும் தான் இருக்கணும். நானே வெறுக்கற அந்த அதிபன் உனக்கு வேண்டாம். அவனால தான் உனக்கு இந்த நிலைமை. நான் உன்னை சரி பண்றேன் இந்த தேவ் மட்டும் உனக்கு போதும். சொல்லுடி அதி வேண்டாம் தேவ் போதும்னு சொல்லுடி… என அவள் தோளை பிடித்து உலுக்கினான்.அவன் உக்கிர முகமும் கர்ஜனை குரலும் கேட்டவள் இன்னுமே பயந்து அலறினாள்.அப்போதும் கூட அதிபனின் கோபம் குறையவில்லை, அவன் எண்ண போக்கில் அதி வேறு யாரோவாகவே தான் தெரிந்தான். அவளின் எண்ணங்களில் ஆக்ரமித்து இருக்கும் அந்த அதியை இவன் அறவே வெறுத்தான். அவனால் தானே இவளுக்கு இந்த நிலைமை. இப்போது கையில் கிடைத்தவளை முழுதாக ஏற்று அரவணைத்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் மனதில் நிறைந்து கிடப்பவனை அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. எதிரி யாரோவாக இருந்தால் எதிர்த்து போராடலாம். ஆனால் அவன் எதிரில் இருப்பது அவளது காதல், கண்ணுக்கே தெரியாத அந்த அதி மீதான காதலை எப்படி எதிர்ப்பது. காலம் முழுக்கவே அவளை இப்படியே நேசிக்க அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் அவள் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாளே. அவளுக்கு அவன் வேண்டாமாம், அந்த அதிபன் தான் வேண்டுமாம். அதை நினைக்க நினைக்க வெறுப்பு மேலிட்டது. அவனே அவனை கொன்று விடும் அளவிற்கு கோபம் வந்தது, ஆனால் முடியாதே. அந்த வெறுப்பு கோபம் எல்லாம் சேர்ந்து அவனை நிதானம் இழக்க செய்திருந்தது.மிருணாவின் அலறல் சத்தம் அந்த வீட்டின் மூளை எங்கும் ஒலித்தது, ஆனாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளும் அளவிற்கு அவனுக்கு நிதானம் இருக்கவில்லை. அவன் பிரெச்சனை எல்லாம் அவள் அதியை மறக்க வேண்டும் இந்த தேவ் மட்டுமே அவள் நினைப்பில் இருக்க வேண்டும் அது தான் அவனுக்கு வேண்டும். அந்த எண்ணத்தில் சொல்லுடி தேவ் தான் வேணும்னு சொல்லு…என அவள் தோளை பற்றி உலுக்க வெளியே இருந்து அறைகதவு பலமாக தட்டப்பட்டது.
ASIN : B0D3VWTWQJ
Language : Tamil
File size : 909 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 154 pages
Birundhalakshmi –
Author , This is part 1
Why authors are not mentioning that this is part1 only. Itâs very disappointing that the story is unfinished and not mentioning that in cover
jeya lakshmi –
NO punctuation
I’m tired of telling this to sooo many authors. Really u people’s r don’t know the agenda of story writing . Put conversation colony in respective place. Without punctuation marks how i identify the conservations and other etc…. interest is gone after seeing the writing style